மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்

மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கடந்த நான்கு ஆண்டுகளாக அதிமுக அரசு எதுவும் செய்ய வில்லை அதனால்தான் பொது மக்கள் என்னிடம் மனு அளிக்கின்றனர்.

  • Share this:
“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை இன்று விழுப்புரத்தில் தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.

விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், மக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், “மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை விழுப்புரத்தில் தொடங்குகிறேன். மனுக்கள் உள்ள பெட்டிகள் ஆட்சிக்கு வந்த மறுநாளே திறக்கப்படும். திமுக ஆட்சி அமைவது பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றத்தான். திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்” என்று கூறினார்.

மேலும் “எந்த தொகுதியாக இருந்தாலும் தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று இல்லை என்பதே உன்னமை. ஆட்சி என்ற ஒன்று இருந்திருந்தால் மக்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டுடிருக்கும். மக்களின் அடிப்படை பிரச்சினையைக்கூட பழனிச்சாமி அரசு தீர்க்கவில்லை. போன் மூலமாக புகார் செய்யலாம் என முதல்வர் சொல்கிறார். ஏன் நான்கு ஆண்டுகள் ஏன் இந்த புத்தி பழனிச்சாமிக்கு வரவில்லை. தமிழகத்தில் யார் முதல்வர் நானா, பழனிச்சாமியா? அனைவருக்கும் செல்போன் தரப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது. ஆனால் அல்வாதான் கொடுத்தார்” என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “கடந்த நான்கு ஆண்டுகளாக அதிமுக அரசு எதுவும் செய்ய வில்லை அதனால்தான் பொது மக்கள் என்னிடம் மனு அளிக்கின்றனர். பழனிச்சாமியின் ஊழல் ஆட்சிக்கு உதாரணம் விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றி 25கோடியில் கட்டப்பட்ட அனை உடைந்து விழுந்தது. அனை உடைந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

தடுப்பணை கட்டிய நபரை ஏன் இந்த அரசு கைது செய்யவில்லை? இதற்கு பழனிச்சாமி பதில் சொல்வாரா. இந்த கூட்டத்தில் மூலமாக சி.வி.சண்முகத்திற்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். பதவியின் மாண்புக்கு ஏற்றது போல் சிவி.சண்முகம் பேச வேண்டும். சண்முகம் என்னை ஒருமையில் பேசுகிறார். திமுகவுக்கு மானமில்லையா என கேட்கிறார் சண்முகம். இரவு சின்னம்மா என்பார் மறுநாள் மாற்றி பேசுவார். அம்மையார் ஜெயலலிதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டிப்பிடிக்க முடியவில்லை.

மேலும் படிக்க...  கொடியேற்றி பேசிய விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்!

 

பதவியைப் பயன்படுத்தி திகுதிக்கு என்ன செய்தார் சண்முகம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கபப்டும் என சொன்னார் ஆனால் தொடங்கவில்லை. உங்களிடம் இருந்து கோட்டையை மீட்கும் தேர்தல்தான் வரும் தேர்தல். இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Published by:Suresh V
First published: