கிறிஸ்தவ வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை : மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

மு.க.ஸ்டாலின்

கொள்ளையடித்து தண்டனை பெற்றவர் அம்மா, அந்த அம்மாவிடமே கொள்ளை அடித்தவர்தான் விசுவநாதன் என்றார் ஸ்டாலின்.

 • Share this:
  கிறிஸ்தவ வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று  ஆட்சி வந்ததுடன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் மற்றும் வேடசந்தூர் திமுக வேட்பாளர் காந்திராஜனை ஆதரித்து வடமதுரையில்  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  அப்போது அவர்  பேசுகையில், “கிறிஸ்தவ வன்னியர்கள் என்னை  நேரில் சந்தித்து ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யப்படும் என தெரிவித்துள்ளதாக கூறினார் மேலும் உங்களை தேடி வந்து இருக்கிறோம், நாடி வந்து இருக்கிறோம், உங்களின் ஒருவனாக ஒட்டு கேட்டு வந்துள்ளேன். நத்தம் வேட்பாளர் ஆண்டி அம்பலம்  வேடசந்தூர் திமுக வேட்பாளர் காந்திராஜன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

  நத்தம் தொகுதியில்வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக நத்தம் விசுவநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளவும். வேண்டாம்  என்று சொல்ல வேண்டாம். அது உங்கள் பணம், அவர்களது அம்மாவே கொள்ளையடித்து தண்டனை பெற்றவர்.  அந்த அம்மாவிடமே கொள்ளையடித்தவர்தான் விசுவநாதன். இவர், எத்தனுக்கு எத்தன் அம்மாவிடம் கொள்ளை அடித்து அதன் காரணமாக 10 நாட்கள் வீட்டில் பூட்டி வைத்தனர்.

  நான் 14 வயதில் அரசியலுக்கு வந்தவன். இப்போது முதல்வர் வேட்பாளர் என்பதால் உங்களை தேடி வந்திருக்கிறேன். 10 ஆண்டு கால ஆட்சியை அகற்ற வேண்டும். வரக்கூடிய தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி. தற்பொழுது பொதுமக்கள் குறைகளை 100 நாட்களில் குறைக்கள் தீர்க்கபடும். பிரச்சினை தீர வில்லை என்றால் கோட்டைக்கு வரலாம் என திட்டம் அறிவித்துள்ளேன். 100 நாளில் பிரச்சினை தீர்பேன்.

  மு.க. ஸ்டாலின் சொல்வது பொய் அது முடியாது என முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார். முதல்வருக்கு எதுவும் தெரியாது, பழனிச்சாமிக்கு தெரிந்தது எல்லாம் ஊழல்தான். கொள்ளை தான் நீட்தேர்வு வருவதற்கு காரணம். ஆனால்,  திமுக ஆட்சிதான் காரணம் என அபாண்ட பொய்யை முதலமைச்சர் சொல்லி வருகிறார்.  கலைஞர் இருந்தவரை நீட்  தமிழகத்தில் அனுமதிக்கப் படவில்லை. ஜெயலலிதா இருந்த போதும் நீட் வரவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த பழனிச்சாமி, அவரது ஆட்சியில் தான் நீட் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்பொழுது அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இது பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும்.

  சொன்னதை செய்தவர் கலைஞர் அவரது மகன் நான், இப்போது உறுதிமொழி தருகிறேன். ஆட்சிக்கு வந்ததும் உங்களது குறைகளை 100 நாளில் தீர்த்து வைப்பேன். கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் விவசாயக்கடன் 7000 கோடி தள்ளுபடி தள்ளுபடி செய்தார். ஆட்சிக்கு வந்ததுடன் கலைஞர் டிவி வழங்கப்படும் என்று சொன்னார் சொன்னதை செய்தார். ஆனால் அதிமுக அரசு  வழங்கிய அனைத்து பொருட்களும் காயலான் கடையில் உள்ளது. கலைஞர் வழங்கிய கலர் டிவி ஒவ்வொரு வீட்டில் உள்ளது.

  ஆட்சி போகப் போகிறது என்பதற்காக எது வேண்டினாலும் சொல்லாம். ரயில் தரேன், விமானம் தரேன், ஹெலிகாப்டர் தரேன் என வாய்க்கு வந்தபடி கூறலாம். விஷம் போல் விலைவாசி ஏறிக் கொண்டு இருக்கிறது அதை கட்டுப்படுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆட்சியில் பால், துவரம் பருப்பு, சிலிண்டர், விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. மோடி அதிக வரி போடுகிறா, நான் அதிக வரி போடுகிறேனா என  போட்டி நடக்கிறது.

  இந்தத் தேர்தலில் கதாநாயகன் கதாநாயகி இரண்டுமே திமுக தேர்தல் அறிக்கைதான். அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன். திமுக தேர்தல் அறிக்கையை குடும்பத் தலைவிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்காக மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளேன். இதைப் பார்த்த எடப்பாடி பழனிச்சாமி 1500 ஆக அறிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையை பார்த்து ஜெராக்ஸ் போட்டுள்ளார்.  ஆண்டவன் சொல்றான் அண்ணாமலை செய்கிறான் என்பதுபோல, ஸ்டாலின் சொல்றான் பழனிச்சாமி காப்பி அடிக்கிறார்.

  Must Read : ‘இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்ப்போம்’ : மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

   

  பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனாவை வைத்து கொள்ளையடித்த அரசு, எடப்பாடி பழனிச்சாமி அரசு. முககவசம், சானிடைசர், விளக்கமாறு போன்றவற்றில் லட்சக்கணக்கில் கொள்ளை யடித்துள்ளனர்”  இவ்வாறு பேசினார் மு.க.ஸ்டாலின்.
  Published by:Suresh V
  First published: