Home /News /tamil-nadu /

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் : முதலமைச்சர் உறுதி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் : முதலமைச்சர் உறுதி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கப்படும்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கப்படும்

Tamil Nadu Assembly : தமிழகத்தில் விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
    அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தமிழக சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப்பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை விதித்து முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு தற்கொலைகள், கொலைகள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், ஆன்லைன் சூதாட்டத்தினால் படித்தவர்களும், வங்கி அதிகாரிகளும் தற்கொலைக்கு ஆளாவதாக செய்திகளில் படிப்பதாகவும் இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

    இதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக இல்லை என்று கூறி கடந்த மாதம் 3ம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது, தொடந்து வழக்குகள் நடைப்பெற உள்ளதாக கூறினார்.

    Must Read : ஊரடங்கில் போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி - தமிழக அரசு

    மேலும், தமிழகத்தில் விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: MK Stalin, Online, TN Assembly

    அடுத்த செய்தி