Frontline Workers : ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் - மு.க.ஸ்டாலின்

Frontline Workers : ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • Share this:
    இது குறித்து மு.க.ஸ்டாலின் வெறியிட்டுள்ள அறிவிப்பில், “மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை.

    செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.

    கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள்.

    முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்” இவ்வாறு கூறியுள்ளார்.

    நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார்.

    Must Read : வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 300 டன் கொரோனா நிவாரண பொருட்கள் : 5 நாட்களில் 25 விமானங்கள்

     

    இந்நிலையில், தமிழகத்தின் முதலமைச்சராக வரும் 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: