Home /News /tamil-nadu /

ஆர்எஸ்எஸ் கருத்தியல் எதிர்ப்பில் சிறிதும் சமரசம் செய்ய மாட்டேன். - திருமாவளவன் மணிவிழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை

ஆர்எஸ்எஸ் கருத்தியல் எதிர்ப்பில் சிறிதும் சமரசம் செய்ய மாட்டேன். - திருமாவளவன் மணிவிழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம். இதனை நானும் முன்மொழிகிறேன். இதை தான் அவரது பிறந்த நாளுக்கு அறிவிக்கிக்கும் கொள்கை பரிசு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி மணிவிழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த மணிவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது, திருமாவளவனின் 50 வயதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்தினார், இன்று 60 வயதில் நான் வாழ்த்துகிறேன். அன்று அப்பா, இன்று மகன் வாழ்த்துகிறார், இன்னும் பல கடமைகள் உள்ளதால், அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் எனவும், அப்போது சட்ட கல்லூரி மாணவராக திமுகவில் சிறப்பாக செயல்பட்டார், அன்று திமுகவில் இருந்து செயல்பட்டார், இன்று கூட்டணிக்குள் இருந்து செயல்படுகிறார் என தெரிவித்தார்.

    தொடர்ந்து தம்பி உடையான் படைக்கு அஞ்ச வேண்டாம் என கூறிய அவர், கூட்டணி பற்றி கூறும் போது, இது தேர்தல் நட்பு அல்ல, கொள்கை கூட்டணி. மேலும் வெற்றிக்கு பிறகும் ஒரு தாய் பிள்ளையாக இருக்கிறோம் என தெரிவித்தார்.

    மேலும், திமுக அரசு திராவிட கொள்கைக்கு எந்த சமரசம் செய்ய மாட்டேன். ஆர்எஸ்எஸ் கருத்தியலை எதிர்ப்பை சிறிது சமரசம் செய்ய மாட்டேன். நான் என்ன டெல்லிக்கு காவடி தூக்கவா போறேன். கருணாநிதி மகன் நான். திமுகவின் கொள்கையை இந்த ஸ்டாலின் விட்டு கொடுக்க மாட்டேன். இதனால் அதிக விமர்சனத்திற்கு நான் வந்துள்ளேன். சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம். இதனை நானும் முன்மொழிகிறேன். இதை தான் அவரது பிறந்த நாளுக்கு அறிவிக்கிக்கும் கொள்கை பரிசு என தெரிவித்தார்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: CM MK Stalin, DMK leader Karunanidhi, RSS, Thirumavalavan

    அடுத்த செய்தி