Home /News /tamil-nadu /

பேராசிரியர் க.அன்பழகன் காட்டிய சுயமரியாதைமிக்க லட்சியப் பாதையில் திராவிட மாடல் அரசு பயணிக்கும் - மு.க.ஸ்டாலின்

பேராசிரியர் க.அன்பழகன் காட்டிய சுயமரியாதைமிக்க லட்சியப் பாதையில் திராவிட மாடல் அரசு பயணிக்கும் - மு.க.ஸ்டாலின்

அன்பழகன் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

அன்பழகன் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

K.Anbazhagan Death Anniversay : மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 2ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, அவரின் திருவுருவப் படத்திற்கு, தூத்துக்குடியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    திமுக பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் 2ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, தூத்துக்குடியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல, தமிழகம் முழுவதிலும், ஆங்காங்கே அன்பழகன் படத்திற்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிடக் கொள்கையே உயிரெனக் கொண்டவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில், முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற தோழராய் இருந்து இயக்கம் காத்தவர். என் பொதுவாழ்வுப் பயணத்தில் அரணாகவும் அறநெறி ஆசானாகவும் இருந்தவர். தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனில்லை என்பதை ஒவ்வொரு மேடையிலும் உரக்க முழங்கியவர். தமிழ்நாட்டின் உயர்வுக்கான அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமே என்பதை உறுதிபட உரைத்தவர். அதற்காக ஓயாமல் உழைத்தவர்.

    Must Read : சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    திராவிடக் கருத்தியலைப் பயிற்றுவித்து, இளைய தலைமுறையினருக்குக் கொள்கை உரம் ஊட்டியவர். கழகத்தின் பொதுச் செயலாளராக ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் அயராது செயலாற்றிய, இனமானப் பேராசிரியரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் புகழ் வணக்கம் செலுத்தி, அவர் காட்டிய சுயமரியாதைமிக்க இலட்சியப் பாதையில் திராவிட மாடல் அரசு பயணிக்கும் என உறுதியேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

     



    மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில், “திராவிடமே தன் உயிரெனக் கொண்டவர்; தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனில்லை என மேடைதோறும் முழங்கியவர்; தலைவர் கலைஞரின் உற்ற தோழர்; என் பொதுவாழ்வுப் பயணத்தில் அரணாகவும் ஆசானாகவும் விளங்கிய இனமானப் பேராசிரியரின் 2-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கத்தை உரித்தாக்குகிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Anbazhagan, DMK, MK Stalin

    அடுத்த செய்தி