நீலகிரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - மு.க ஸ்டாலின்

டிவிட்டரில் பதிவிட்ட மு.க.ஸ்டாலின், நிர்மூலமாகி இருக்கும் நீலகிரி மாவட்ட மக்களை 2-வது நாளாக சந்தித்தேன். அதிமுக அரசு நீலகிரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, போர்கால அடிப்படையில் பாதிப்புகளை சரிசெய்ய முன்வர வேண்டும் என கூறியிருந்தார்.

Web Desk | news18-tamil
Updated: August 12, 2019, 9:39 PM IST
நீலகிரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்
Web Desk | news18-tamil
Updated: August 12, 2019, 9:39 PM IST
மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நீலகிரி பகுதிக்கு ரூ. 10 கோடி நிதி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை நேற்று மு.க.ஸ்டாலின் நேரடி ஆய்வு செய்தார்.

மேலும், நிவாரணப் பொருட்களையும் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டாலும், இனிமேலாவது நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை அரசு துரிதப்படுத்த வேண்டுமென கோரினார்.


நீலகிரி மாவட்ட நிவாரண பணிகளுக்கு, திமுக எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 8 கோடியும், சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ. 2 கோடியும் சேர்த்து ரூ. 10 கோடி வழங்கப்படுமென மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பின்னர், டிவிட்டரில் பதிவிட்ட அவர், நிர்மூலமாகி இருக்கும் நீலகிரி மாவட்ட மக்களை 2-வது நாளாக சந்தித்தேன். அதிமுக அரசு நீலகிரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, போர்கால அடிப்படையில் பாதிப்புகளை சரிசெய்ய முன்வர வேண்டும் என கூறியிருந்தார்.Also Watch: ரஜினிக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...