• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசை தேடி மக்கள் வந்த காலம் போய், தற்போது மக்களை தேடி அரசு வருகிறது - மு.க.ஸ்டாலின்

அரசை தேடி மக்கள் வந்த காலம் போய், தற்போது மக்களை தேடி அரசு வருகிறது - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

காது கேளாதோருக்கான கருவிகள் வாங்க இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    அரசை தேடி மக்கள் வந்த காலம் இருந்தது. தற்போது மக்களை தேடி அரசு வருகிறது. இது தான் திமுக. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பார்கள். அழாத குழந்தைக்கு பால் கொடுபது தாய். அத்தகைய தாயாக திமுக இருக்கும். மாற்று திறனாளிகளுக்கு தேவையானவற்றை திமுக அரசு வழங்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    உலக காது கேளாதோர் வார தொடக்க நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசுகையில், மாற்று திறனாளிகளுக்கு தேவையானவற்றை திமுக அரசு வழங்கும் என்று கூறினார். பின்னர், 7 வயது குழந்தை உட்பட காது கேளாதோர் 10 பேருக்கு காது கேட்கும் கருவிகள் மற்றும் கருவிகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கினார். மேலும், காது கேளாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய 3.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிகழ்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 200 ஆண்டுகால பழமையான பெருக்கமரம் குறித்த கல்வெட்டைத் திறந்து வைத்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கான பிரத்யேக கிளினிக்கை திறந்து வைத்தார். மேலும், 7 வயது குழந்தை உட்பட காது கேளாதோர் 10 பேருக்கு காது கேட்கும் கருவிகள் மற்றும் கருவிகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கினார்.

    அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மக்களை தேடி மருத்துவதுவம் திட்டத்தின் கீழ் இது வரை 10 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். ஒரு நாள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் மக்களுக்காக கவலைக் கொள்வது தான் திமுக அரசு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் மக்களுக்கு பயனுள்ள ஒவ்வொரு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    அதே போல் நான் என் பிறந்தநாளில் அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள லிட்டில் பிளவர் பள்ளிக்கு சென்று பிள்ளைகளுடன் கழிப்பேன். அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதே போன்ற மகிழ்ச்சி இன்று எனக்கு கிடைக்கிறது. வானுயர்ந்த வள்ளுவர் சிலை வைப்போம், டைடல் பார்க் அமைப்போம், அதே போன்று காது கேளாதோருக்கும் திட்டம் தொடங்குவோம் அது தான் திமுக அரசு.

    காது கேளாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய 3.6 லட்சம் ஒதுக்கப்படுகிறது. காது கேளாதோருக்கான கருவிகள் வாங்க இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசை தேடி மக்கள் வந்த காலம் இருந்தது. தற்போது மக்களை தேடி அரசு வருகிறது. இது தான் திமுக. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் எனார்கள். அழாத குழந்தைக்கு பால் கொடுபது தாய். அத்தகைய தாயாக திமுக இருக்கும். மாற்று திறனாளிகளுக்கு தேவையானவற்றை திமுக அரசு வழங்கும்.

    சென்னை, கிருஷ்ணகிரி, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ. 98.9 லட்சம் மதிப்பிலான கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய காது கேட்கும் கருவிகளை வழங்கியிருக்கிறேன். பழுதடைந்த கருவிகள் மாற்றித் தரப்பட்டுள்ளன. புதிதாக அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் கருவிகள் தரப்பட்டுள்ளன.

    Must Read : மண்வளத்தை பெருக்கி, இயற்கை முறையில் பயிரிட்டு செடிகளை விற்பனை செய்யும் திருநங்கைகள்

    இந்த அறுவை சிகிச்சை செய்து முறையான பயிற்சி மூலம் பேசும் திறனை பெற்ற குழந்தைகளையும் நான் கண்டிருக்கிறேன். விரைவில் நீங்கள் முழுமையாக குணமடைய வேண்டும் என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: