Home /News /tamil-nadu /

சென்னை மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்

சென்னை மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Tamil Nadu Assembly : வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவதால், மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீடிக்க வேண்டிய அவசியம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வண்டலூர் அருகே புதிய பேருந்து நிலைய முனையம் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

    கேள்வி நேரத்தில் முதல் கேள்வியாக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, சென்னை மெட்ரோ ரயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிக்க அரசு ஆவன செய்யுமா என கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவதால், மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை அரசு தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

    Read More : நம்ம யார் வம்புக்கு போறது இல்ல - போலீஸ் ஸ்டேஷனில் புலம்பிய மாடர்ன் பெண் சாமியார்

    சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, பட்டுக்கோட்டை தொகுதி, அதிராம்பட்டினம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்த அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, அதிராம்பட்டு நகராட்சியில் தற்போது 34,122 மக்கள் தொகை உள்ளதாகவும், 49.92 கி.மீ தூரத்திற்கு சாலைகள், 7.83 கி.மீ தொலைவிற்கு வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருவதோடு, 7226 குடியிருப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    Must Read : ராஜேந்திர பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

    மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தி பணிகளை முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்படும் எனவும் கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Metro Rail, MK Stalin, TN Assembly

    அடுத்த செய்தி