ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பர்... பாஜக புகுந்த இடமும் உருப்படாது - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கோவை துடியலூர் பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பர் அதேபோல பாஜக புகுந்த இடமும் உருப்படாது என்று கூறினார்.

 • Share this:
  கோவை துடியலூர் பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பர் அதேபோல பாஜக புகுந்த இடமும் உருப்படாது என்று கூறினார்.

  பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், “கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின எஃகு கோட்டை என பழனிச்சாமி சொல்லி வருகின்றார். அந்த கொங்கு மண்டலத்தில் நாங்க நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டையை போட்டு விட்டோம். இந்த முறை கொங்கு மண்டலத்தில் "வாஷ் அவுட்" செய்யப்படும்.

  பலம் வாய்ந்த அமைச்சர்கள் இந்த கொங்கு மண்டலத்தில் இருந்தாலும், எதுவும் செய்யவில்லை. சிறுகுறு தொழில், நெசவுதொழில் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலுமணி தனது சகோதரர் மூலம் கொள்ளையடித்து வருகின்றார். பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களை காப்பாற்றி இந்த அரசு துரோகம் செய்து வருகின்றது.

  இவர்களுக்கு மறக்க முடியாத அளவிற்கு பெரிய தண்டணையை மக்கள் கொடுக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் அமைச்சர் வேலுமணி 21 தொகுதிகளை பார்த்து கொள்கின்றேன் என்றார். இப்போது அவரது தொகுதியில் மட்டுமே முடக்கி விட்டோம். இதுதாண் திமுக, திமுக தொண்டர்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள்.

  ஆட்சிக்கு வந்த பின், சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஊழல் செய்தவர்கள் அடுத்த நாளே சிறைக்குள செல்வார்கள். 234 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும். கொள்ளை யடிப்பதில் நம்பர் 1 வேலுமணிதான். தனி நீதி மன்றம் அமைத்து அவர்களுக்கு தண்டணை பெற்று தரப்படும். யார் விட்டாலும் ஸ்டாலின் விடமாட்டான்.

  தாராபுரத்தில் பிரதமர் பேசியதற்கு அன்றே பதில் சொன்னேன். நேற்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இங்கு வந்து பிரச்சாரம் செய்தார். அமைதியாக இருந்த கோவையில் ஊர்வலமாக சென்று பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள் அதேபோல பாஜக புகுந்த இடமும் உருப்படாது.

  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், திமுக ஆட்சியில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்கின்றார். இந்தியாவிலேயே அதிகமாக பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கக்பட்ட பெண்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான். பாஜக ஆளும் மாநிலத்தின் நிலையை இவ்வளவு மோசமாக வைத்துக்கொண்டு திமுகவை பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கின்றது?

  மதுரை வரும் பிரதமர் பிரச்சாரத்திற்கு செல்லும் முன்பு மதுரை எய்ம்ஸ்க்கு சென்று பார்க்க வேண்டும் என்று தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன். சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். மாநகராட்சியே நேரடியாக தண்ணீர் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  Must Read : தலைவிரித்தாடும் 2-ம் ஆட்டம்; ஒரேநாளில் 72,330 பேருக்கு கொரோனா தொற்று- 459 பேர் மரணம்- 10 முக்கிய அம்சங்கள்

   

  அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகள் பின்நோக்கி போய்விட்டோம். திராவிட இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும், சுயமரியாதை, தன்மானம் காப்பாற்றப்பட வேண்டும். மதவெறியை திணிக்கவும், இந்தியை திணிக்கவும் மத்திய அரசு முயல்கின்றது. இது தந்தை பெரியார் பிறந்த மண், அண்ணா பிறந்த மண், கலைஞர் பிறந்த மண் இங்கு மோடி மஸ்தான் வேலை எல்லாம் பலிக்காது” என ஸ்டாலின் கூறினார்.
  Published by:Suresh V
  First published: