• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின்

தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் இருந்து எக்காரணத்தாலும் பின் வாங்க மாட்டோம்

  • Share this:
    திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிலமில்லாத எத்தனை நபர்களுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொடுத்தீர்கள், முழுமையாக் கொடுக்கவில்லை எனவும், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஆயிரம் ரூபாய் என தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது ஏழ்மையான குடும்பத்திற்கு வழங்கப்படும் என கூறுவதாக சுட்டிக்காட்டினார்.

    அதற்குப் பதிலளித்த கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமி இரண்டரை லட்சம் ஏக்கர் நிலங்களை ஏழை எளிய மக்களுக்கு பிரித்து கொடுத்தது திமுக அரசு தான் என்றும்,‘சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம், சொல்லாதையும் செய்வோம்’ அதான் திமுக அரசு எனவும் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து பேசிய, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும், துணைக்கோள் நகரம் ஏற்படுத்தப்படும், வீட்டிற்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்று கூறியதை செய்தீர்களா? என அதிமுக வினரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் தான் நிறைவடைந்துள்ளதாகவும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்தும் கட்டாயம் நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.

    அதன் பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிதிநிலையை சரிசெய்து நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

    மேலும், பயிர்க்கடன், நகைக்கடனில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் ஆதாரத்துடன் மானியக்கோரிக்கை விவாதத்தில் எடுத்துரைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

    நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, வெள்ளை அறிக்கை என்பது தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காரணத்தில் வெளியிடப்படுவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் கூறியதாகவும், எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் இருந்து பின் வாங்க மாட்டோம் என்றும் உறுதிப்பட கூறினார். மேலும், நகைக்கடன், பயிக்கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறிய அவர், அது சரி செய்யப்பட்ட பின் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

    Must Read : குட்டி பூனையை தாய் பூனை கவ்வுவது போல பட்ஜெட் இருக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

    அதிமுக ஆட்சி வாக்குறுதியில் சில வாக்குறுதிகளை நிறைவேற்றிய நீங்கள் பலவற்றை நிறைவேற்ற வில்லை என பட்டியலிட்டு கூறினார் மு.க.ஸ்டாலின். அதன் படி, இலவச செல்போன், பண்ணை மகளிர் குழுக்கள், அனைத்து பொது இடங்களில் வைபை வசதி, சென்னையில் மோனோ ரயில் திட்டம், ஆவின் பால் 25 ரூபாய், பட்டு ஜவுளி பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றவில்லை என சுட்டிக்காட்டினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், பயிர்க்கடன், நகைக்கடனில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் ஆதாரத்துடன் மானியக்கோரிக்கை விவாதத்தில் எடுத்துரைக்கப்படும் என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: