• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேர்தலுக்குப் பிறகு தளவாய் சுந்தரம் பாஜகவில் சேருவார் - மு.க.ஸ்டாலின்

தேர்தலுக்குப் பிறகு தளவாய் சுந்தரம் பாஜகவில் சேருவார் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்குப் பிறகு தளவாய் சுந்தரம் பாஜகவில் சேருவார் என்றும், பொன்.ராதாகிருஷ்ணனை பொய் ராதாகிருஷ்ணன் என்றுதான் சொல்ல வேண்டும் எனவும் கூறினார்.

  • Share this:
    கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்குப் பிறகு தளவாய் சுந்தரம் பாஜகவில் சேருவார் என்றும், பொன்.ராதாகிருஷ்ணனை பொய் ராதாகிருஷ்ணன் என்றுதான் சொல்ல வேண்டும் எனவும் கூறினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர்., சிலை முன்பு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜனை ஆகியோரை ஆதரித்து பேசினா.

    அப்போது ஸ்டாலின் பேசுகையில், “கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் நிற்பதை பார்த்தால் தற்போதைய ஆட்சியின் கொடுமையை விட இது ஒன்றும் பெரிது இல்லை என்பது போல் உள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் பழனிச்சாமி இங்கே வந்திருக்கிறார். ஊர்ந்து ஊர்ந்து போனவர் தற்போது ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார். அதனை சொன்னால் அவருக்கு கோபம் வரும்.

    பாம்பு கடியில் உள்ள விஷத்தை விட துரோகத்தின் விஷம் கொடுமையானது. கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் சசிகலாவுடன் இருந்து அவருக்கு துரோகம் செய்து விட்டு எடப்பாடியோடு சேர்ந்து தற்போது வேட்பாளராகி இருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு தளவாய் சுந்தரம் பாஜகவில் சேருவார்.

    இலங்கை தமிழக மீனவர்கள் பிரச்சினை இது வரையிலும் தீர்த்து வைக்கவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சி நிலைநிறுத்திய பிறகு இவை அனைத்திற்கும் தீர்வு ஏற்படுத்தப்படும்.” என்று கூறினார்.

    மேலும், பொன்.ராதாகிருஷ்ணன் பல வாக்குறுதிகளை அளித்தார், அதை எதையும் செய்யவில்லை அவர் பொன்.ராதாகிருஷ்ணன் இல்லை பொய் ராதாகிருஷ்ணன் என்று சொல்லவேண்டும்” என்றார்.

    தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “தற்போது குமரியில் துறைமுகம் வராது என முதலமைச்சர் கூறுகிறார் ஆனால் தேர்தலுக்குப் பிறகு இதை மாற்றி பேசுவார்கள். சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுகதான் தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிர்ப்போம் என கூறுகிறது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த அரசு ஆயிரம் ரூபாய் வழங்கியது, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீதமுள்ள 4 ஆயிரம் ரூபாயை வழங்குவோம். நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்காக தேர்தல் மட்டுமல்ல, நமது மானத்தை மரியாதையை காப்பாற்ற நடக்கும் தேர்தல், மதவெறி கொண்ட பாஜகவை விரட்டுவதற்கான தேர்தல்.” என்று கூறினார்.

    Must Read : ஹெச்.ராஜாவுக்கு ஏன் இந்த நிலைமை? - குழம்பிய காரைக்குடி வாக்காளர்கள்

     

    அத்துடன், “கூட்டமாக கூடும் இடத்தில் வரும் போது, அனைவரும் மாஸ்க் போடுங்கள். உரிமையை காக்க திமுக., உயிரை காக்க மாஸ்க்” என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: