• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • ‘தமிழ்நாட்டில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது’ - மு.க.ஸ்டாலின்

‘தமிழ்நாட்டில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது’ - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

இது திராவிட மண் தந்தை பெரியார் பேரரிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் பிறந்த வாழ்ந்த வளர்ந்த மண்....

 • Share this:
  எடப்பாடி பழனிசாமிக்கு கலெக்‌ஷன், கரப்ஷன், கமிஷன் இவை மட்டுமே தெரியும் என்றும், தமிழகத்தில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

  சென்னை ராக்கி திரையரங்கம் அருகே அம்பத்தூர், அண்ணாநகர் வேட்பாளர் எம்.கே.மோகன், வில்லிவாக்கம் வேட்பாளர் வெற்றியழகன், மதுரவாயல் வேட்பாளர் காரம்பாக்கம் கனபதி, அம்பத்தூர் வேட்பாளர் ஜோசப் சாமுவேல் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  அப்போது அவர் பேசுகையில், “எப்போதும் சென்னை என்பது கழகத்தின் கோட்டை. அந்த சென்னை கோட்டையை கைபற்ற வேண்டும். அதற்காகத்தான் உங்களை நாடி வந்திருக்கிறேன். அதிமுக ஆட்சியில் 50 ஆண்டு காலம் பின்னால் சென்றுவிட்டோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று, தான் சிறப்பாக ஆட்சி நடத்துவதாகவும் மக்களுக்காக தொண்டாற்றுகிறேன், எனக்கு பல விருதுகள் வந்து சேர்ந்துள்ளன” என்று கூறி வருகிறார்.

  மேலும், “இந்தியா டுடேயில் தமிழகம் முதலிடம் என்று சொல்லியிருக்கிறது. 50 ஆண்டுகளாக சமூக பணியாற்றி அதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக வெளியிட்டுள்ளது. நான்தான் விவசாயி என்று எடப்பாடி சொல்லிக்கொள்கிறார். பச்சை துண்டு போட்டு பச்ச துரோகம் செய்யும் எடப்பாடி, தான் ஒரு விவசாயி என கூறுகிறார்.

  திமுக ஆட்சியில் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்ததெல்லாம் ஊழல் மட்டும் தான். எடப்பாடி பழனிசாமிக்கு கலெக்‌ஷன், கரப்ஷன், கமிஷன் இவை மட்டுமே தெரியும்.

  நான் தொழிற்துறை அமைச்சராக பொருப்பேற்றபோது பல்வேறு தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன. ஆனால் அதிமுக ஆட்சியில் அப்படி எதுவும் ஏற்படவில்லை. மக்களை சுரண்ட கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி. இதனை ஒழிக்கவேண்டும் என்றால் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்.

  சென்னை நகருக்கு புயல், வெள்ள பெருக்கை கட்டுபடுத்த வெள்ள தடுப்பு மேலாண்மை குழு அமைக்க உறுதி செய்துள்ளோம். மாணவர்கள் இளைஞர்கள் கல்விக்காக வாங்கிய கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும். அரசு அலுவகலகங்களில் காலிபணியிடங்களில் 3.50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் அமர்த்தப்படுவார்கள்.” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

  மேலும், “கூட்ட நெரிசலில் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் நல்லது. பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா பரவலின் போது சட்ட மன்றத்தில் நான் கேள்வியெழுப்பிய போது முதல்வரிடம் கேட்டதற்கு அம்மா ஆட்சியில் எந்த பரவல் பாதிப்பும் ஏற்படாது என கூறிய பழனிசாமி மறுநாள் அவரே முககவசம் அணிந்து வந்தார். கொரோனாவை விட மோசமானவர் எடப்பாடி பழனிசாமி.

  “கொரோனா பரவலின்போது 5,000 ரூபாய் கொடுக்க சொன்னால் 1000 மட்டுமே வழங்கினர். நம்முடைய ஆட்சியில் மீதம் உள்ள 4000 ரூபாய் வழங்கப்படும். இந்த தமிழ் மண்ணில் இந்தியை திணித்து நீட்டை கொண்டு வந்து மத வெரியை தூண்டுபவர்ளுக்கு நான் சொல்லுவது, இது திராவிட மண் தந்தை பெரியார் பேரரிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் பிறந்த வாழ்ந்த வளர்ந்த மண். உங்க மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது. இது தமிழ்நாடு, வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும்.

  Must Read : காசு வாங்கிட்டிங்களா அப்படின்னு கேக்குறாங்க... தேர்தலில் போட்டியிடவில்லை - மன்சூர் அலிகான்

   

  ஏதோ ஆட்சி மாற்றத்திற்கு மட்டும் நடைபெறும் தேர்தல் என நினைக்க வேண்டாம். நமது சுயமரியாதையை காப்பாற்ற கூடிய தேர்தல். நாம் இழந்திருக்க கூடிய உரிமையை மீட்க கூடிய தேர்தல்” என பேசினார் ஸ்டாலின்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: