அதிமுக பாஜகவின் கிளை கழகமாக செயல்படுகிறது - மு.க.ஸ்டாலின்

அதிமுக பாஜகவின் கிளை கழகமாக செயல்படுகிறது - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய இயக்கம் என்றார் ஸ்டாலின்.

 • Share this:
  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பேசிய அவர், அதிமுக பாஜகவின் கிளை கழகம் போல செயல்படுவதாக கூறினார்.

  6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள், மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோரை ஆதரித்து பிரச்சார வாகனத்தில் இருந்தவாறே பேசிய ஸ்டாலின், “திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய இயக்கம் என்றார்.

  “நான் படிப்படியாக வளர்ந்து வந்தவன், எடப்பாடி ஊர்ந்து ஊர்ந்து வளர்ந்து வந்தவர், தலைவர் கலைஞர் ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டம், திருவள்ளுவர் சிலை, நேசமணிக்கு மணி மண்டபம் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது திமுக.

  அதிமுக ஆட்சியில் இருந்த கடந்த பத்து ஆண்டு காலத்தில், எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. எனக்கு வரலாறு உண்டு. நான் கலைஞரின் மகன், ஆதாரம் இல்லாமல் எதையும் பேசமாட்டேன். பல்வேறு கொடுமைகளை, அக்கிரமங்களை செய்த ஆட்சி எடப்பாடி பழனிசாமி ஆட்சி.

  எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து நான் கேட்கிறேன் நீங்கள் பத்து வருடமாக ஆட்சியிலிருந்து என்ன கிழித்துள்ளீர்கள்? பொதுப்பணித்துறை டெண்டர் நான்காயிரம் கோடி ரூபாய் டெண்டர் எடப்பாடி சம்பந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் மோடியிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு முன்னர், மோடிக்கு ஜிஎஸ்டி, உதய் திட்டம், நீட்தேர்வு திட்டத்தை ஆதரிக்க முடியாது என தெரிவித்தார். ஆனால் நடந்தது என்ன? பாஜகவின் மக்கள் விரோத திட்டங்களுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டவர்கள்தான் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள்.” என்றார்.

  Must Read :  25 ஆண்டு சரித்திர சாதனை திரும்ப இருக்கிறது... தமிழ் மொழி, தமிழினத்திற்கு முழு விரோதி பாஜக - ப.சிதம்பரம்

   

  தொடர்ந்து பேசிய ஸ்டாலின், கன்னியாகுமரியில் ஐயா வைகுண்டசாமி ஆராய்ச்சி மையம் துவங்கப்படும் என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published: