திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டங்களை மற்ற மாநில அரசுகள் எதிர்த்து வரும் நிலையில், தமிழக அரசு மட்டும் ஆதரிக்கிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

 • Share this:
  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, நத்தம் கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று, ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். அப்போது ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கி திமுகவினர் மரியாதை செலுத்தினர்.

  விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். அனைத்து மதத்தினரும் ஒரே பகுதியில் வாழும் நடைமுறையை வழங்குவது சமத்துவபுரம் என்று கூறிய அவர், பெரியார் கண்ட கனவை தமிழகம் முழுவதும் உருவாக்கினோம். ஆனால் இன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றார்.

  மேலும், நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வோம் என்று கூறிய ஸ்டாலின், ஜெயலலிதா இருந்தபோது கூட நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை என்றார். நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டு, டெல்லிக்கு அனுப்பிய தீர்மானம் என்ன ஆனது என தெரியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

  மேலும் படிக்க... உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் உள்ளவர்கள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள்: விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்க மறுப்பு

  அனைவருக்கும் ஒரே கல்வி முறை இருக்க வேண்டும் என்பதற்காகவே சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது என்று கூறிய ஸ்டாலின், ஆனால் தற்போது கல்விக்கு ஆபத்து வந்திருக்கிறது என்றும், நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் எனவும் கூறினார்.

  வேளாண் சட்டங்களுக்கு எதிராக மற்ற மாநிலங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு மட்டும் ஆதரிக்கிறது என்று குற்றம் சாடடினார். ‘நானும் ரவுடிதான்’ என்பதை போல நான்தான் விவசாயி என சொல்லிக்கொள்கிறார் முதலமைச்சர். விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் ஆபத்து இல்லை என முதலமைச்சர் பொய் பிரச்சாரம் செய்கிறார் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

  மேலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: