Home /News /tamil-nadu /

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு : சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு : சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம்

மு.க.ஸ்டாலின் - ஜி.கே.மணி

மு.க.ஸ்டாலின் - ஜி.கே.மணி

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி விரிவாக ஆய்வு நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அரசாணை பிறப்பிப்பது தொடர்பாக நல்ல முடிவு அறிவிக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்துப் பேசினார்.

  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்தக் கூடிய வகையில் அதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும் என பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி பேரவையில் வலியுறுத்தினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு பதவி ஏற்றதில் இருந்து கோரோனா தொற்றை குறைப்பதில் முழுவீச்சில் செயல்பட்டு, தற்போதுதான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து ஓரளவு மூச்சு விட்டு கொண்டு இருப்பதாக கூறினார்.

  மேலும், சட்டமன்ற உறுப்பினர் கூறிய விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி விரிவாக ஆய்வு நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

  இந்நிலையில், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசியபோது, மார்ச் 7ஆம் தேதி தமிழகத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்டது. அன்று முதல் தேர்தல் அறிவிப்பு வரை சிறப்பாக செயல்பட்டு அவற்றை கட்டுப்படுத்தினோம். அப்போது நோய்த் தொற்றை கண்டு ஓடி ஒழியும் நிலை இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் அதிமுக அரசு கடுமையாக போராடி நோயை கட்டுக்குள் கொண்டுவந்தது.

  நோய் அறிகுறி எப்படி இருக்கும் என்று தெரியாத சூழலில் கூட மருத்துவர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். நோயை குணப்படுத்த தேவையான மருந்துகள் கையிருப்பு இருந்தன. இந்தியாவிலேயே ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை அதிக அளவில் மேற்கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்தது என்று கூறினார்.

  தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனையின் போது தமிழகத்தில் எடுத்த தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வைத்தேன். பிரதமர் தமிழ்நாட்டை பாராட்டினார். அதேபோல் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையை மற்ற மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டுமென தமிழகத்தை பெருமைப்படுத்தினார். நானே நேரடியாக 32 மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட நிர்வாகத்தினருடன் நேரடியாக ஆலோசனை மேற்கொண்டேன். தமிழகத்தில் அதிகமான காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டன. இதனால் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்தனர் என்று கூறினார்.

  Must Read : ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? பாஜக நயினார் நாகேந்திரன் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்

  அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், அதிமுக ஆட்சி காலத்தை விட, திமுக ஆட்சி காலத்தில் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறன. இந்தியாவிற்கு தமிழகம் முன்மாதிரியாக இருப்பதாக பிரதமர் திமுக அரசை பாராட்டினார் என்று கூறினார்.

  அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ன எடுத்துள்ளீர் என நானே பேரவையில் கேட்டேன். அதற்கு பதிலளித்த அப்போதைய முதலமைச்சர், ‘உங்களுக்கு வயதாகிறது. நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களுக்கு கொரோனா வராது என்று சொன்னார்.’ நாங்கள் சொல்லும் போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்றும் கூறினார்.
  Published by:Suresh V
  First published:

  Tags: MK Stalin, PMK, Reservation, TN Assembly

  அடுத்த செய்தி