Home /News /tamil-nadu /

கலைஞர் சொல்லி திருமா செய்யாத ஒன்று இது மட்டும் தான்; ஆனால் நான் மட்டும்... - முதல்வர் ஸ்டாலின்

கலைஞர் சொல்லி திருமா செய்யாத ஒன்று இது மட்டும் தான்; ஆனால் நான் மட்டும்... - முதல்வர் ஸ்டாலின்

திருமாவளவன் - ஸ்டாலின்

திருமாவளவன் - ஸ்டாலின்

இன்றைக்கு போல 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமாவும் நானும் நெருக்கமாக இருந்திருந்தால், அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி மணிவிழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த மணிவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் சொன்னது ஒன்றை மட்டும் திருமாவளவன் கேட்டவில்லை என தெரிவித்தார்.

    இதனை விவரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய கூறினார்; கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான் என கூறிய முதலமைச்சர், இன்றைக்கு போல 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமாவும் நானும் நெருக்கமாக இருந்திருந்தால், அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன் என தெரிவித்தார்.

    Also Read : கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல் சென்னை மாநகராட்சி பள்ளிகள்: அமைச்சர் மா. சுப்ரமணியன்

    ஆனால், திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்துகொண்டார் கட்சி தொண்டர்கள்தான் அவருக்கு பிள்ளைகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதுமட்டுமின்றி திமுகவிற்கும் விசிகவிற்கும் இருப்பது தாய் பிள்ளை உறவு என கூறிய முதலமைச்சர், தம்பி உடையான் படைக்கு அஞ்ச வேண்டாம் என தெரிவித்தார். மேலும் இரு கட்சிகளுக்கான கூட்டணியை பற்றி விளக்கும் போது, இது தேர்தல் நட்பு அல்ல, கொள்கை கூட்டணி என தெரிவித்தார்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: CM MK Stalin, Thirumavalavan

    அடுத்த செய்தி