முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஊரடங்கு விதிகளை பின்பற்றி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.. திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..

ஊரடங்கு விதிகளை பின்பற்றி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.. திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை, திமுகவினர் அவரவர் இல்லத்திலேயே எளிமையாக கொண்டாடுமாறு, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ம் வரும் நிலையில் அதுதொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மக்களின் உயிரைக் காப்பது ஒன்றே நம் முன் உள்ள தலையாய பணி என்றும், அதற்காக முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றுவதே கருணாநிதி பிறந்தநாள் விழாவுக்கு சிறப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் பிறந்தநாள் விழா நிகழ்வு எதுவும் நடத்திட வேண்டாம் என்றும், அவரவர் இல்லங்களில் கருணாநிதி உருவப் படத்திற்கு மரியாதை செலுத்துங்கள் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க...  கொரோனா பாதிப்பு குறித்து கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு...

உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை எதிர்பார்த்திருக்கும் ஏழை - எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று உதவிகளை வழங்கிடுங்கள் என்றும் திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

' isDesktop="true" id="472947" youtubeid="673dvNCZqyk" category="tamil-nadu">

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: DMK Karunanidhi, Happy BirthDay, MK Stalin