• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டெல்லி செல்லும் முன் பாதிக்கப்பட்ட மக்களை ஆலோசித்திருக்க வேண்டாமா? - ஸ்டாலின்

டெல்லி செல்லும் முன் பாதிக்கப்பட்ட மக்களை ஆலோசித்திருக்க வேண்டாமா? - ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கஜா புயல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக முதல்வர் டெல்லியில் குற்றம் சாட்டியநிலையில், அதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
முதல்வர் டெல்லி சென்று நிவாரணம் கேட்கும் முன் கஜா புயல் பாதித்த பகுதி மக்களை சந்தித்து கலந்து ஆலோசித்திருக்க வேண்டாமா? என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15000 கோடி ஒதுக்கக்கோரி வலியுறுத்தினார்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், திமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டதைவிட அதிகமான நிதி தற்போது வழங்கப்படுவதாக கூறினார்.

மேலும், மக்களை தூண்டிவிட்டு எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்கின்றன என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக ட்வீட் செய்துள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின், “ஹெலிகாப்டரில் பறந்துகொண்டே ஆய்வு நாடகம் நடத்திய முதலமைச்சர் ‘எட்டிப்பார்க்காத’ பழனிசாமி, மத்திய அரசிடம் நிவாரணம் கேட்க டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட மக்கள் - விவசாயிகள் - மீனவர்கள் - பொதுநலச் சங்கங்களை நேரடியாக சந்தித்து கலந்து ஆலோசித்திருக்க வேண்டாமா?

டெல்லிக்குச் சென்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேட்டி தரும் முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்! அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை.

இன்றுகூட இரு விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். உடனே, தற்கொலைகளை தடுத்தாக வேண்டும்! இனியாவது, ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

 





Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: