• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மக்களை நேரடியாக ஏன் சந்திக்கவில்லை - முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

மக்களை நேரடியாக ஏன் சந்திக்கவில்லை - முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

மு.க ஸ்டாலின்

மு.க ஸ்டாலின்

மழையால் போக முடியவில்லை என்றால் மழை விட்ட பின்னர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டியதுதானே என்றும் ஸ்டாலின், முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மழையால் தனது ஆய்வுப்பயணத்தை முதல்வர் ரத்து செய்துள்ள நிலையில், மழை விட்ட பின்னர் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வேண்டியதுதானே என்று மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கஜா புயல் பாதித்த திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளை முதல்வர் இன்று ஆய்வு செய்ய இருந்த நிலையில், மழை காரணமாக தனது பயணத்தை ரத்து செய்தார்.

செய்தியாளர்களை இன்று சந்தித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், “கஜா புயலால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் நடுத்தெருவில் விட்டது போல நிற்கின்றனர்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமல், சேலத்தில் கொண்டாட்டமாக நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின்னர், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் எழுப்பிய கேள்விக்கு பயந்து 5 நாட்கள் கழித்து எடப்பாடி பழனிசாமி இன்று  அங்கு சென்றுள்ளார்.

விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்ற அவர், குறிப்பிட்ட சில இடத்துக்கு மட்டும் சென்று கட்சியினர், காவல்துறையினர் புடைசூழ, முதல்வர் எங்கே இருக்கிறார்? என்று மக்கள் பார்க்க முடியாதபடி இருந்துள்ளார்.  செட்டப் செய்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கொடுத்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வர இருக்கிறார்.

மழையால் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். திருச்சியிலேயே தங்கிவிட்டு மழை விட்ட பின்னர், நாளை பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியதுதானே

நான் கேட்கும் கேள்வி முதல்வராக இருக்கும் அவர் மக்களை ஏன் சந்திக்கவில்லை?. திமுக சார்பில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே, திமுக சார்பில் ரூ.1 கோடியும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: