மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? எய்ம்ஸ் விவகாரத்தில் ஸ்டாலின் கேள்வி

மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? எய்ம்ஸ் விவகாரத்தில் ஸ்டாலின் கேள்வி

மு.க.ஸ்டாலின்

மதுரையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் அதிமுக அரசை குற்றம் சாட்டி பேசியுள்ளார்.

 • Share this:
  மதுரை ஒத்தக்கடை பகுதியில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

  மக்களின் புகார் மனுக்களை பெற்று அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.பின்னர் மேடையில் பேசியவர்,அதிமுக ஆட்சியில் ஏற்கனவே இருக்கும் மருத்துவமனைக்கு தேவையான பொருட்களை வழங்காமல், கவுண்டமணி செந்தில் வாழைப்பழம் காமெடிப்போல பழைய பில்டிங்க்கு பச்சை பெயின்ட் அடித்து மினி கிளினிக் என்று மக்களை முதலமைச்சர் ஏமாற்றி விட்டதாக விமர்சித்தார்.

  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என காத்திருந்ததாகவும், மருத்துவமனைக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என கூறியவர்,மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 300, 500 கோடிகள் ஒதுக்கியுள்ள நிலையில் தமிழக எய்ம்ஸ்க்கு வெறும் 12 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது.மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

  தொடர்ந்து பேசியவர், மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஆர்.பி உதயகுமாரும் ஸ்மார்ட்டாக ஊழல் செய்வதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின்,
  மதுரையை சிட்னியாக மாற்றுவோம், ரோமாக மாற்றுவோம் என்று சொன்ன அமைச்சர்கள் திமுக ஆட்சி அமைந்ததும் வெளிநாடுகளில் சென்று தலைமறைவாக போகிறார்கள் என்றார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: