ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை : சட்ட ஆணையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை : சட்ட ஆணையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மு.க.ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின் கடிதம்

டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி. வில்சன் இந்த கடிதத்தை வழங்கினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தும் முனைப்பில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரைகளை கேட்டு சட்ட ஆணையத்துக்கு மத்திய சட்டத்துறை கடிதம் அனுப்பி இருந்தது.

இதையடுத்து, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சட்ட ஆணையம் அண்மையில் கடிதம் அனுப்பியது. இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி. வில்சன் இந்த கடிதத்தை வழங்கினார்.

First published: