கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மு.க.ஸ்டாலின்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மு.க.ஸ்டாலின்

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மு.க.ஸ்டாலின்

சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

  • Share this:
தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1.15 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணைக்குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்தநிலையில், சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதுவரையில், இந்தியா முழுவதும் 2.33 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: