Home /News /tamil-nadu /

21 தமிழறிஞர்களுக்கு தமிழக அரசின் விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

21 தமிழறிஞர்களுக்கு தமிழக அரசின் விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

TN Government Awards 2022 : சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், விருதாளர்களுக்கு விருது மற்றும் காசோலைகளை வழங்கினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் விருது, விருதிற்கான காசோலை மற்றும் தங்கப் பதக்கம் ஆகியவற்றை வழங்கினார்.

விருதுகளின் விவரம் :

2022ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது (மறைந்த) திரு. மு.மீனாட்சி சுந்தரம்

தந்தைபெரியார் விருது - க.திருநாவுக்கரசு

அண்ணல் அம்பேத்கர் விருது - நீதியரசர் சந்துரு

பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்

பெருந்தலைவர் காமராசர் விருது - முனைவர் குமரி அனந்தன்

மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார்

பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - முனைவர் ம.ராசேந்திரன்

கம்பர் விருது - திருமதி பாரதி பாஸ்கர்

சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்

ஜியு போப் விருது - அ.சு.பன்னீர்செல்வன்

உமறுப்புலவர் விருது - நா.மம்மது

இளங்கோவடிகள் விருது - நெல்லை கண்ணன்

தேவநேயப் பாவணர் விருது - கு. அரசேந்திரன்

சிங்காரவேலர் விருது - கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்

மறைமலை அடிகளார் விருது - சுகி சிவம்

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது - முனைவர் இரா. சஞ்சீவிராயர்

அயோத்திதாசப் பண்டிதர் விருது - ஞான அலாய்சியஸ்

2020ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது - முனைவர் வ.தனலட்சுமி

சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை

தமிழ்த்தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,  மலேசியா
(மற்ற அனைத்து விருதுகளும் 2021ம் ஆண்டிற்காக வழங்கப்படுகிறது.) உள்ளிட்ட 21 விருதுகள்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், எத்தனையோ விருது வழங்கும் விழாவில் பங்கேற்று இருந்தாலும் இந்த விழாவில் பங்கேற்கும் போது உணர்ச்சியும் எழுச்சியும் மேலோங்கி இருக்கிறது. 3,500 ஆண்டுகள் பழமையும் , சிறப்பும் கொண்ட தமிழ் மொழியின் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகள் வழங்கியதன் மூலம் என் தமிழ் கடனை செய்து வருகிறேன். தமிழக அரசு முக்கியமாக பெருமை அடைகிறது. வாழும் காலத்தில் தகுதி சார் தமிழர்களை பாராட்டிய விருதை தமிழக அரசு பெற்றுள்ளது. திமுக ஆட்சி தமிழ் ஆட்சியாக தமிழனாட்சியாக நடைபெற்று வருகிறது.தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, தமிழ்நாடு எனும் பெயர், இவை திமுக காலத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து தெரிவு முறைகளிலும் கட்டாய தமிழ், ஆலயங்களில் தமிழ் ஒலிக்க துவங்கி உள்ளது. குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல், இதழியலாளர்களுக்கு விருது, இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி 10 லட்சம் நிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும்.

Read More : நியூஸ்18 செய்தி எதிரொலி: குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற மாவட்ட ஆட்சியர்... வீடு கட்டித் தருவதாகவும் உறுதி

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்க அரசு நிலம் வழங்கும், இதற்கு அரசு தன்னால் ஆனா அனைத்து முயற்சிகளையும் வழங்கும்.
21 விருதுகள் தரப்பட்டுள்ளன. விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்தவர்களுக்கு நன்றி என்று கூறினார்.

Must Read : Hijab Row Verdict - ஹிஜாப் அணிவது இஸ்லாமின் அடிப்படை நடைமுறை இல்லை.. தடையை உறுதி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசுத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Published by:Suresh V
First published:

Tags: MK Stalin, TN Govt

அடுத்த செய்தி