வேளாண் சட்டங்களை மு.க.ஸ்டாலின் அரசியலாக்குகிறார் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு

மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் விளைபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டங்களை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலாக்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

 • Share this:
  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கோகோ, கரும்பு சாகுபடி, கோழிப்பண்ணை போன்றவற்றில் உள்ள ஒப்பந்த முறைகளை ஒழுங்குபடுத்த விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் சட்டம் உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒப்பந்த சாகுபடியை ஊக்குவிக்கும் இந்த சட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தும் வகையிலோ, பாதிக்கும் வகையிலோ பிரிவுகள் எதுவும் இல்லை என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். அரசியல் காரணங்களுக்காக தற்போது மு.க.ஸ்டாலின் சட்டத்தை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  Also read: தமிழக மின்வாரியத்தில் நஷ்டம் தொடர்ந்து அதிகரிப்பு: மின் கட்டணம் உயருமா?

  விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் முழுமையான சுதந்திரத்தை வழங்குவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் உணவுப் பொருட்களுக்கு பேரிடர் காலங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க, முறைப்படுத்த வழிவகை செய்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  தற்போதைய மத்திய அரசின் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்பதை, தான் உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  ஒருமுறை அல்ல ஓராயிரம் முறை விவசாயி என சொல்லிக்கொள்வதில் தான் பெருமை கொள்வதாகவும், விவசாயிகளின் நலனைக் காக்க தனது அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Rizwan
  First published: