மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் முதல் நாள் பிளான் என்னென்ன?

மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் அவர் முதல் நாளில் என்ன பிளான் செய்துள்ளார் குறித்த விவரம்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இன்று முதல்வராக பொறுப்பேற்கிறார். ஸ்டாலினை தொடர்ந்து திமுக வெளியிட்டுள்ள 34 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

  கொரோனா தொற்று காரணமாக பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்ப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், பதவியேற்பு விழாவை வீட்டிலிருந்தே காணுமாறு தொண்டர்களுக்கு முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  மு.க.ஸடாலின் பதவியேற்பு விழா காலை 9 மணி முதல் 10.30 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு மு.க.ஸ்டாலின் கருணாநதி நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தி ஆசி பெற உள்ளார். அதன்பின் பெரியார் திடல், பேராசரியர் இல்லம், கோபலபுரம் சென்றபின் இறுதியாக சிஐடி வீட்டிற்கு ஸ்டாலின் செல்கிறார்.

  அதன்பின் மாலை 4 மணி தலைமை செயலகம் சென்று முதல்வர் அலுவலகத்தில் பணியை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின். அதை தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதை முடித்தபின் மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார் ஸ்டாலின்.
  Published by:Vijay R
  First published: