ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு... மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு... மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்!

மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணை திறப்பு

Mettur Dam Opening : சேலத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவிருந்து வங்காள விரிகுடா பூம்புகார் வரை செல்லக்கூடிய காவிரி நீர் வழித்தடங்களில் அணை கட்டுவதற்கான ஆய்வு சுமார் 90 ஆண்டுகள் நடைபெற்றது. 1924ஆம் ஆண்டு பாலமலைக்கும் சீத்தாமலைக்கும் இடையே அணை கட்ட ஆங்கிலேய அரசு முடிவு செய்து 1925ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின.

1934 ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு, அதே ஆண்டில் ஜூன் 12ஆம் தேதி டெல்டா மாவட்ட முப்போக (குறுவை, சம்பா, தாளடி) சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உரிய தேதியான ஜீன் 12-ல் தண்ணீர் திறக்க, ஆண்டு தோறும் கர்நாடக வழங்கும் தண்ணீரை எதிர்நோக்கி தமிழக டெல்டா மாவட்ட விவசாய பணிகள் நடை பெறுவது வழக்கம்.

இந்நிலையில் மேட்டூர் அணை வரலாற்றில் 1957ஆம் ஆண்டு மே மாதத்தில் பருவ மழைக்கு முன்பாகவே கோடை மழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததாக தகவல் மட்டுமே உள்ளது, அதற்கான ஆதாரங்கள் பொதுப்பணித்துறையிடமே இல்லை எனக் கூறப்படும் நிலையில் சுமார் 65 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பருவமழைக்கு முன்பாகவே மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி அளவிற்கு அதிகரித்து.

மேட்டூட் அணையின் நீர்மட்டம் கடந்த 20 நாட்களில் சுமார் 11 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சம்பா தாளடி போன்ற முப்போக சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதிக்கு முன்பாகவே, மே மாதம் 24 தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகளில் உரிய தேதியான ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாக 10 முறையும், குறித்த காலத்தில் 17 முறையும், காலதாமதமாக 60 முறையும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை வரலாற்றில் 1942 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மே மாதத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 77 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 5 வது முறையாக கோடை காலமான மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Must Read : 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்

அதன்படி, இன்று காலை (மே மாதம் 24ஆம் தேதி) குறுவை சம்பா தாளடி என சொல்லப்படும் முப்போக சாகுபடிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்துவிட்டார். அதன்படி அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் நாற்றங்கால் நடவு பணிக்கு தயாராகி வருகின்றனர். தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Cauvery Delta, Mettur Dam, MK Stalin, Salem