Home /News /tamil-nadu /

இதையெல்லாம் பார்க்க அப்பா இல்லை.. மேடையில் நா தழுதழுத்த கனிமொழி - உருக்கமான வீடியோ

இதையெல்லாம் பார்க்க அப்பா இல்லை.. மேடையில் நா தழுதழுத்த கனிமொழி - உருக்கமான வீடியோ

மேடையில் நா தழுதழுத்த கனிமொழி -

மேடையில் நா தழுதழுத்த கனிமொழி -

Kanimozhi | MK Stalin | Ungalil Oruvan | உங்களின் ஒருவன் புத்தக வெளியிட்டு விழாவில் வரவேற்பு உரையாற்றிய கனிமொழி கருணாநிதியை நினைத்து உருக்கமாக பேசினார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

    கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக்கொண்டார். இந்த சுயசரிதை நூலில், மு.க.ஸ்டாலின் அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார். பூம்புகார் பதிப்பகம்‘ இந்த நுலை வெளிக்கொண்டுவந்துள்ளது.

    இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோருக்கு மேடையில் இடமளிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி கனிமொழி எம்.பி வரவேற்பு உரையாற்றினார்.

    Also Read : ஸ்டாலினுக்கு இத்தனை வயதா? எனது அம்மா நம்பவில்லை - மேடையை கலகலப்பாக்கிய ராகுல் காந்தி

    அதில், கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப்பேசினார் கனிமொழி. அண்ணன் தளபதி என்று அன்போடு அழைத்து விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்று பேசிய கனிமொழி, உதயநிதி ஸ்டாலினையும் வரவேற்றார். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக ஒலிக்கும் உதயநிதியின் குரல் நெஞ்சுக்கு நீதியாக ஒலிக்கிறது என்றும் சொன்னார்.



    பிறப்பு முதல் மிசா கைதி வரை நீளும் இந்த புத்தகம் ஒரு அரசியல் ஆவணம் என்று சொன்னார் கனிமொழி. இதையெல்லாம் பார்க்க அப்பா இல்லை என்று சொன்ன போது கனிமொழியின் குரல் கம்மியது. உடன் பிறப்புகளின் அன்பில் அப்பாவின் அன்பு பொங்கி வழிகிறது என்றார். கனிமொழியின் வரவேற்பு உரையை தொடர்ந்து உங்களின் ஒருவன் புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட்டார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, Kanimozhi, MK Stalin, Rahul gandhi

    அடுத்த செய்தி