தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்..

தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்..

அண்ணா அறிவாலயம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில், வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 


  திமுகவின் விருப்ப மனு தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில், திமுகவின் வேட்பாளர் நேர்காணல் இன்று காலை துவங்குகிறது. விருப்ப மனு அளித்தவர்கள் இடம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி கிழக்கு - மத்திய, தென்காசி தெற்கு - வடக்கு தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தோரிடம் நேர்காணல் நடக்கிறது


  மாலை 4 மணிக்கு விருதுநகர் வடக்கு - தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு-தெற்கு, திண்டுக்கல் கிழக்கு - மேற்கு தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தோரிடம் நேர்காணல் நடைபெற உள்ளது.
  வருகிற 6-ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது  கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விருப்பமனு அளித்தனர். மொத்தம் 8,388 விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதில் 7967 மனுக்கள் தாக்கலாகி உள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.


  அண்ணா அறிவாலயத்தில் நடக்கவிருக்கும் வேட்பாளர் நேர்காணலை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் நடத்த உள்ளனர்.

  Published by:Gunavathy
  First published: