• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • MK Stalin : முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நாளை பிரதமரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

MK Stalin : முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நாளை பிரதமரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாளை மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இந்த சந்திக்கும்போது பல்வேறு அம்ச கோரிக்கை மனுக்களை பிரதமரிடம் வழங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ஆம் தேதி பதவி ஏற்றார். அப்போது கொரோனா 2ஆம் அலை தீவிரமாக இருந்ததன் காரணமாக, பதவியேற்ற நாளில் இருந்து அவரது அமைச்சரவை, தொற்று பவரல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதற்கான மருத்துவ ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவை பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை கடிதங்கள் மூலம் வலியுறுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    குறிப்பாக, செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்குவது குறித்து கடிதம் எழுதியதோடு, மாநிலங்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றும் கருத்து வெளியிட்டிருந்தார்.

    அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மத்திய அரசின் தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து நாளைய சந்திப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என தெரிகிறது.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை உயர்த்தி வழங்க வேண்டும், கருப்பு பூஞ்சை நோய் மருந்தை அதிகரித்து வழங்க வேண்டும், மேகதாது அணை பிரச்சனை, காவிரி விவகாரம், ஹைட்ரோகார்பன் தொடர்பாகவும், தற்போது தமிழகத்தில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்கவும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    நாளை மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து, நாளை காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களைவை உறுப்பினர்களும் டெல்லி சென்றுள்ளனர். பின்னர் மாலை 5 மணியளவில் பிரதமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் வழங்க உள்ளார்.

    Must Read : கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் இடைவெளி சர்ச்சை - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம்

    அதன் தொடர்ச்சியாக, திமுக கட்சி அலுவலகமான அறிவாலயம் கட்டிட பணிகளையும் முதலமைச்சர் பார்வையிடுவார் என்று தெரிகிறது. நாளை இரவு டெல்லியில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மறுநாள் (18ஆம் தேதி) காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமிர்த்தமாக சந்திக்கிறார். பிற்பகலுக்கு பின் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: