Home /News /tamil-nadu /

Headlines Today : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை - தலைப்புச் செய்திகள் (ஜூலை 1, 2022)

Headlines Today : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை - தலைப்புச் செய்திகள் (ஜூலை 1, 2022)

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Headlines Today : தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2000 ஐ கடந்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

  தமிழகத்தில் நேற்று 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

  அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து விட்டு, தற்போது வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவது குறித்து ஓபிஎஸ் தனக்கு கடிதம் எழுதுவது ஏற்புடையதல்ல என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

  சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

  சென்னை பாண்டி பஜாரில் பார்க்கிங் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அரசுப்பள்ளியில் படித்து கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெற விண்ணப்பிக்க கால அவகாசம் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  ஆந்திராவில் இருந்து வந்த ரயிலில் உரிய ஆவணமின்றி பயணி ஒருவர் எடுத்து வந்த 78 லட்சம் ரூபாயை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

  சென்னை நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.

  குற்றாலத்தில் ஐந்தருவியில் நீர்வரத்து திடீரென அதிகரித்ததால்,  குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  ஜி.எஸ்.டி வரி விதிப்பில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநில ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட இருப்பதாக, தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பன்னிக்குட்டி படத்தின் புதிய டிரெய்லரை நடிகர் ஆர்யா இன்று வெளியிடுகிறார்.

  மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி, அருண்விஜய் நடித்த யானை படமும், அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிபிளாக் படமும் இன்று திரைக்கு வந்துள்ளன.

  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 18ம் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  மகாராஷ்டிராவின் முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்ரே விலகிய நிலையில், புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார்.

  டிஎஸ்-இஓ புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

  கிரிப்டோ கரன்சிகள் அபாயகரமானவை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

  மத்திய அரசின் புதிய ஊழியர்கள் சட்டம் இன்று முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 187 ரூபாய் குறைந்துள்ளது.

  ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இன்று முதல் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அபராதமாக 1000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

  உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேருக்கும் ஜூலை 13ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

  மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

  உலகப்புகழ்பெற்ற புரி ஜெகனந்நாதர் ஆலய தேரோட்ட திருவிழா இன்று துவங்க உள்ளது.

  கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது கையெறி குண்டு வீசப்பட்டதால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  2035ம் ஆண்டில் இந்தியாவில் நகர்புறங்களில் வசிப்போரின் எண்ணிக்கை 67 .5 கோடியாக இருக்கும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.

  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நத்திங் போன் 1 pre order இன்று தொடங்குகிறது. ஜூலை 12ம் தேதி இந்த போன் இந்தியாவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  பர்கர் (Burger) சமைக்கும் புதிய ரோபோக்களை லீட்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

  ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

  அமெரிக்காவின் நெவேடா கவுண்டி பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அங்குள்ள 900 ஏக்கர் வனப்பகுதியை தீ சேதப்படுத்தியது.

  பிலிப்பைன்சின் புதிய அதிபராக பெர்டினண்ட் மேக்ராஸ் ஜூனியர் பதவியேற்றார்.

  Must Read : வரிகள் தொடங்கி அபராதம் வரை.. ஜூலை 1 முதல் 6 முக்கிய மாற்றங்கள்! - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க

  இங்கிலாந்துக்கு எதிரான 3 டி20 மற்றும் , 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

  ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடந்த டைமண்ட் லீக் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

  மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் பிரணாய் காலிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

  இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Corona, Headlines, MK Stalin, Today news

  அடுத்த செய்தி