ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் ஒமைக்ரான் தாக்கம் இல்லாத போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை வழங்கலாமா அல்லது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

  தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 15ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உளளிட்டோர் பங்கேற்கின்றனர்.

  தமிழகத்தில் ஒமைக்ரான் கொரோனாவின் தாக்கம் இதுவரை உறுதியாகாத நிலையிலும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

  மதுரை, தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்களே, முடிவு எடுத்து அறிவித்துள்ளன.

  Must Read : இந்தோ-பாக் யுத்தத்தின் 50வது ஆண்டு: பிபின் ராவத் பேசிய கடைசி உரை வெளியீடு

  இந்த சூழலில், குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் கருத்து கேட்டறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Corona safety, MK Stalin, Omicron