பயிர் காப்பீடு திட்டம்... பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நரேந்திர மோடி - மு.க.ஸ்டாலின்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தினை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

 • Share this:
  பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பை முன்பு இருந்தபடியே திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

  அதில், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தினை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாகவும், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளால், காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவும், பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  இந்த சூழலில் காப்பீடு கட்டண மானியத்தில் மத்திய அரசின் பங்கினை 49 விழுக்காட்டிலிருந்து, பாசன பகுதிகளுக்கு 25 விழுக்காடாகவும், மானாவாரி பகுதிகளுக்கு 30 விழுக்காடாகவும் குறைத்து நிர்ணயித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

  இதனால், 2016-17ம் ஆண்டில் 566 கோடி ரூபாயாக இருந்த மாநில அரசின் பங்கு, 2020-21ம் ஆண்டில் ஆயிரத்து 918 கோடி ரூபாயாக அதாவது 239 விழுக்காடு அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தமிழக அரசுக்கு சவாலாகவும், கடினமாக உள்ளதென்றும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை இத்திட்டத்தின் நோக்கத்தையே முடக்கியுள்ளதாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

  Must Read : தளர்வா? கடுமையா? - ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

  பயிர் காப்பீடு கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பை குறைக்கும் வகையில் உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்க வேண்டும் எனவும், காப்பீடு கட்டணத்தில் மத்திய அரசு, மாநில அரசுகளின் பங்கு தலா 49 விகிதமும், விவசாயிகளின் பங்கு 2 விகிதம் எனும் அடிப்படையிலும் உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
  Published by:Suresh V
  First published: