மதுரையில் ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து மதுரை தோப்பூரில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆனால், அதற்கான கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்காததால், விரைந்து அதற்காக பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27.1.2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்திக் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்றும், இதற்கான நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும்” என்று அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலருக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்துள்ள பதில் மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 2015 ஆம் பட்ஜெட்டில், அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்களால் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில், 2018 ஆம் ஆண்டில்தான் மதுரையில் இடம் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுக்கு மேலாகியும் கட்டுமானப் பணிகளைத் இதுவரையில் தொடங்கவில்லை. அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பண்கள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
Must Read : தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் 14ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு - முழு விவரம்
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர் நடைமுறை தொடங்கப் பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டபோது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் கட்டடப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIIMS, Aiims Madurai, MK Stalin, Narendra Modi