முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான
திமுக அரசு ஆன்மிக அரசு என தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் புகழாரம் சூட்டியுள்ளார். தெய்வீகப் பேரவையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதினங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், பேரூர் ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், துலாபார ஆதீனம், அவிநாசி மடாதிபதி, மலையப்ப ஆதீனம் உட்பட 11 ஆதினங்கள், அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மே 5 ம் தேதி அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ள நிலையில், அறநிலையத்துறை திட்டங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆதீன கர்த்தர்கள் எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோரையும் தலைமை செயலகத்தில் சந்தித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ’ஆதீன கர்த்தர்கள், சங்கராசாரியர், ஜீயர்களை உள்ளடக்கிய
தெய்வீகப்பேரவை மீண்டும் நடத்த வேண்டும் எனவும், ஆதீனங்களுக்கான சட்ட திட்டங்கள், பழக்க வழக்கங்களின் படி அரசு செயல்ப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி..? 94 ஆண்டுகளில் இல்லாத கோர விபத்து பற்றி ஊர் மக்கள் கூறுவது என்ன?
திருக்குவளையில் கண்டறியப்பட்ட மரகதலிங்கத்தை திருக்கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு ஆன்மிக அரசு எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: தேர் மீது மின்சாரம் தாக்கி 11 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்... ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
தொடர்ந்து பேசிய குன்றக்குடி ஆதினம் தவத்திரு
பொன்னம்பல அடிகளார், தஞ்சாவூரில் எதிர்பாராமல் நடந்த விபத்து அனைவரின் உள்ளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை ஜனநாயகப்பூர்வமாக செயல்படுகின்றது. சட்ட வரையறைக்குட்பட்டு செயல்படுகிறார்கள் என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.