Home /News /tamil-nadu /

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு : மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு : மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு

Pongal gift : ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

    அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டும், பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கும் விதமாகவும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அதில் குறிப்பிட்ட நாளின்படி, பொதுமக்கள் பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    டோக்கன் அடிப்படையில் தினமும் 200 ரேஷன் கார்டுதாரர்கள் வீதம் பொருட்களை வழங்கப்பட உள்ளது, பொதுமக்களை தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Must Read : கோவில் திருவிழாவில் நடனமாடிய அதிமுக எம்எல்ஏ

    டோக்கனில் குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க முடியாதவர்கள் வரும் 10-ம் தேதிக்கு பிறகும் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: MK Stalin, Pongal, Pongal Gift, Ration Shop

    அடுத்த செய்தி