• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு திட்டம் : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு திட்டம் : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

இதை விட வேகமான ஆட்சி இந்தியாவில் இருக்க முடியாது என்கிற அளவுக்கு நாம் செயல்பட்டு வருகிறோம் என்று பெருமிதம் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.

  • Share this:
    சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் பேசுகையில், வேளாண் மக்களின் சிறு கோரிக்கையாக இருந்தாலும் அதற்கு உடனடியாகச் செவி மடுத்து அதனை நிறைவேற்றித் தரும் ஆட்சி தான் திமுக ஆட்சி என்று கூறினார்.

    கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சில திட்டங்கள் அந்த நேரத்திற்கு தேவையானதாக இருக்கும் சில திட்டங்கள் சில ஆண்டுகள் தேவையானதாக இருக்கும், ஆனால் சில திட்டங்கள் மட்டும் தான் தலைமுறை தாண்டி தேவை இருக்கும் அப்படியான திட்டம் தான் இந்த திட்டம். கடந்த 2006 -11 திமுக ஆட்சி காலத்தில் 2 இலட்சத்து 9 ஆயிரத்து 910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது.

    ஆனால் 2011 -16 அதிமுக ஆட்சியில் 82 ஆயிரத்து 987 பேருக்கும், 2016-21 அதிமுக ஆட்சியில் 1 இலட்சத்து 38 ஆயிரத்து 592 பேருக்கும் தான் புதிய இணைப்புகள் தரப்பட்டன. அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வேறுபாடு என்பது இதுதான். பத்து ஆண்டு காலத்திலே சுமார் 2 லட்சம் இணைப்புகள் தான் அதிமுக ஆட்சியில் தரப்பட்டன. ஆனால் ஆட்சிக்கு வந்த நான்கு மாத காலத்தில் ஒரு லட்சம் இணைப்புகளை நாம் கொடுக்கப் போகிறோம். இதை விட வேகமான ஆட்சி இந்தியாவில் இருக்க முடியாது என்கிற அளவுக்கு நாம் செயல்பட்டு வருகிறோம்.

    திமுக ஆட்சி என்பதே விவாயிகளின் ஆட்சியாக, வேளாண்மை புரட்சி செய்யும் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்துள்ளது. மண்ணையும் மக்களையும் காப்பதில் எப்போதும் யாருக்கும் சளைக்காத ஆட்சி தான் திமுக ஆட்சி. இதற்கு ஒரு உதாரணம், சில நாட்களுக்கு முன்னால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக துணிச்சலாக தீர்மானம் நிறைவேற்றிய ஆட்சி திமுக ஆட்சி என்பதை விவசாயப் பெருமக்கள் மறக்க மாட்டார்கள்.

    காவிரி போன்ற பெரிய பிரச்னையாக இருந்தாலும், வேளாண் மக்களின் சிறு கோரிக்கையாக இருந்தாலும் அதற்கு உடனடியாகச் செவி மடுத்து அதனை நிறைவேற்றித் தரும் ஆட்சி தான் திமுக ஆட்சி. ஒரு லட்சம் புதிய இணைப்புகள் வழங்குகிறோம் - அதிலும் பெரும்பாலும் இலவசமாக வழங்குகிறோம் என்றால் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது செழிப்பாக இருக்கிறது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். செழிப்பாக அல்ல, சீரழித்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் கடந்த அதிமுக ஆட்சியினர்.

    1.59 லட்சம் கோடிக்கு கடனில் இருக்கிறது மின்வாரியம். ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி வட்டி கட்ட வேண்டிய நிலைமையில் இருக்கிறது. மிக அதிகமான விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்துள்ளார்கள். குறுகிய கால ஒப்பந்தங்களாக இல்லாமல் மிக நீண்ட கால ஒப்பந்தங்களாகப் போட்டுள்ளார்கள். அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பதிவேட்டில் இருப்பதும் - இருப்பு இருப்பதும் வித்தியாசமாக உள்ளது.

    Must Read : சிரிப்பால் ஏற்பட்ட சண்டை : இருதரப்புக்கு இடையே மோதல்... போர்களமாக மாறிய ஹோட்டல்

    புதிய மின் திட்டங்களை திட்டமிட்டுள்ளோம். 17 ஆயிரத்து 980 மெகா வாட் மின்சாரத்தை வரும் பத்தாண்டு காலத்தில் தயாரிக்க திட்டப்பணிகள் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே திட்டமிடுதலில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கச் சொல்லி இருக்கிறோம். சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருக்கிறோம். திருவாரூரில் சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: