• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது, 'கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்' என்ற பெயரில் இது புத்துயிர் பெற்றுள்ளது.

  • Share this:
    முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்ட ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது, 'கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்' என்ற பெயரில் புத்துயிர் பெற்றுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் சாதாரண மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டுமென்பதற்காக, வரும் முன் காப்போம் திட்டம், கடந்த திமுக ஆட்சியில் 2006ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் இதன் மூலம் பயனடைந்தனர். அதிமுக ஆட்சியில் இத்திட்டம் தொடரப்படவில்லை. எளிய மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில், வருமுன் காப்போம் என்ற திட்டத்தை 2006-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் பரிசோதனையின் மூலம், ஆரம்ப கட்டத்திலேயே நோய்கள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான உரிய சிகிச்சை வழங்கி பொதுமக்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், அத்திட்டம் ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ என்ற பெயரில், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு, 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. அதாவது ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம்கள், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் என, 385 வட்டாரங்கள் மற்றும் 20 மாநகராட்சிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை பெருமாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

    இந்த முகாம்களில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், குடல் நோய் மருத்துவர், குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் சித்த மருத்துவர் என 15 சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள். பொதுமக்களை பரிசோதித்து உடலில் என்ன பிரச்னை இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தேவையான சிகிச்சை வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தால் உடனடியாக பரிந்துரைக்கப்படும்.

     



    இந்த முகாமில், சர்க்கரை நோய், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் கண்டறியப்பட்டால், மக்களை தேடி மருத்துவத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.

    Must Read : திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கார்டுக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்து இருக்கிறார்களா..?

    இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் 2,530 பயனாளிகளுக்கு, 24 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சேலம் மாவட்டத்தில் 100 விழுக்காடு தடுப்பூசி போடப்பட்டுள்ள அத்தனூர்பட்டி, முத்தம்பட்டி, மஞ்சகுட்டை, குறிச்சி, தலைவாசல் ஊராட்சிகளின் தலைவர்களை முதலமைச்சர் பாராட்டினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: