இது அம்மா உணவகம் தானா?

அம்மா உணவகம்

அம்மா உணவகம்

அம்மா உணவகம் என்பதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் ஒரு உணவகம் செயல்பட்டு வருகிறது.

  • Share this:
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவங்கள், அம்மா மருந்தங்கள் போன்ற திட்டங்களின் பெயர்கள் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்த உடன் சென்னை முகப்பேர் பகுதியில் அமைந்திருந்த அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஜெயலலிதாவின் உருவப்படங்கள் கிழிக்கப்பட்டன.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து அம்மா உணவகம் குறித்து எந்த சர்ச்சைகளும் எழாத நிலையில், மதுரை சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் வைக்கப்பட்டது தொடர்பாக பெரும் சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.

அம்மா உணவகம்


இது தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என மதுரை மாநகராட்சி ஆணையர் விளக்க அளித்துள்ள நிலையில், மதுரை ஆரப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் மற்றொரு அம்மா உணவகம் அதற்குண்டான எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் உள்ளது. உணவக வாயிலில் அம்மா உணவகம் என்ற பெயர் பலகை இல்லை. மேலும், அம்மா உணவகம் என்பதற்கான எந்த ஆதாரமும் உணவகத்தில் எங்கும் இல்லை.மாறாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாவட்ட செயலாளர் தளபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள திமுக அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை அதற்கு மாறாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: