Home /News /tamil-nadu /

ஏப்.1-ல் டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்

ஏப்.1-ல் டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MK Stalin : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி செல்கிறார். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ஆரம்பத்தில் ஒரு நாளாக திட்டமிடப்பட்டு இருந்தது, பின்னர் இரண்டு நாளாக மாற்றப்பட்டுள்ளது. இது தேசிய அளவில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

    அப்போது, நீட் விவகாரம், மேகதாது, தமிழகத்திற்கு தேவையான நிதி, வெள்ள நிவாரணம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் இழப்பீடு நீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் இரண்டாம் தேதி டெல்லி தீன தயாள் உபாத்யா சாலையில் கட்டப்பட்டுள்ள, திமுகவின் கட்சி அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை கட்சிக் கொடி ஏற்றி மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் திமுக எம்.பிக்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    எதிர்க்கட்சியாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தாலும் பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கும் திமுக சார்பாக அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    Must Read : எலக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும்போது தீ விபத்து - வேலூரில் தந்தை, மகள் உயிரிழப்பு

    திமுக அலுவலக கட்டட திறப்பு விழாவை முடித்துக் கொண்டு, இரண்டாம் தேதி இரவு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார். இதனிடையே, டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படாததால், கட்சி அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க, தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் தவிர வேறு யாரும் வர வேண்டாம் என திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: CM delhi visit, DMK, MK Stalin, Narendra Modi

    அடுத்த செய்தி