நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கப்படுகிறது. இந்த பணியை தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாந்தோப்பில் உள்ள அரசுப்பள்ளியில் இன்று தொடக்கி வைக்கிறார். ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், 15-18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு இன்று முதல் (ஜனவரி 3ஆம்) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த தடுப்பூசிகளுக்கான முன்பதிவு கோவின் இணையதளமான https://www.cowin.gov.in தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோடம்பாக்கம் சாலை, மேட்டுப்பாளையம் மாந்தோப்பில் உள்ள பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயதிற்கு மேற்பட்ட 1,050 மாணவ- மாணவியர்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.
இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தில், 2007ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தமிழக வளர்ச்சிக்கு பா.ஜ.க ஆக்கப்பூர்வமாக இருக்கவேண்டும் - அமைச்சர் சேகர் பாபு
தமிழகத்தில் 15-18 வயதுக்குட்பட்டோர் 33.46 லட்சம் பேர் இருக்கின்றனர். அதில், 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிகளில் படிக்கின்றனர். எனவே, பள்ளிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்க உரிய இடம் ஒதுக்கி உரிய எற்பாடுகள் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : அச்சுறுத்தும் ஒமைக்ரான் பரவல்: நாம் செய்யவேண்டியது என்ன?
அத்துடன், பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டையைக் கொண்டு இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும் பதிவு செய்வது கட்டாயம் அல்ல எனவும், அதற்கேற்ப கோவாக்சின் தடுப்பூசிகளை இருப்பில் வைக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, MK Stalin, Omicron