முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் உறுதி

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் உறுதி

ஆளுநர் முதல்வர் சந்திப்பு

ஆளுநர் முதல்வர் சந்திப்பு

NEET exemption bill : ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போது நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அவருடன் அவை முன்னவர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உடன் சென்றனர். தமிழக அரசின் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், ஆளுநருடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் 2ஆவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் தேர்வு விலக்கு மசோதா உள்பட, பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநரை மு.க. ஸ்டாலின் வலியுறுத்தத்தியதாகவும், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநர் உறுதியளித்ததாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Must Read : 21 தமிழறிஞர்களுக்கு தமிழக அரசின் விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

First published:

Tags: MK Stalin, Neet Exam, RN Ravi