முகப்பு /செய்தி /தமிழ்நாடு / MK Stalin : 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவி ஏற்பு

MK Stalin : 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவி ஏற்பு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மே 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் எளிமையான முறையில் முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக தெவிக்கப்பட்டுள்ளது. அவருடன் அமைச்சர்ளும் பதவியேற்க உள்ளன.

  • Last Updated :

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் இம்மாதம் 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவி ஏற்புவிழா நடைபெறும் என மு.க. ஸ்டாலின் தெவித்துள்ளார்.

இந்நிலையில், 24 முதல் 28 அமைச்சர்கள் வரை அப்போது பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட இளம் தலைமுறையினருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைப்பெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது..

அத்துடன், 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. 50 வருடம் அரசியலில் இருந்தாலும், இப்போதுதான் முதல் முறையாக  மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக அரியணை ஏறவிருக்கிறார்.

Must Read : தாத்தாவை மிஞ்சிய பேரனாக உதயநிதி ஸ்டாலின்... அதிக வாக்குகள், அதிக வித்தியாசத்தில் வெற்றி வாகை

top videos

    இதையடுத்து அவருக்கு பல்வேறு தலைவர்களும், திரைப்பிரபலங்களும், பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    First published:

    Tags: MK Stalin, TN Assembly, TN Assembly Election 2021