Home /News /tamil-nadu /

ஒபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு இரட்டை வேடம் போட வேண்டாம் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஒபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு இரட்டை வேடம் போட வேண்டாம் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

ஒபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு இரட்டை வேடம் போட வேண்டாம் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்

  • News18
  • Last Updated :
    இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு இரட்டை வேடம் போட்டு குழப்பத்தை விளைவிக்காமல் வெளிப்படைத்தனமையுடன் செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ இடங்களில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில், கமிட்டி அமைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், சுகாதாரத்துறை செயலாளருக்கு பதிலாக மாநில மருத்துவ சேவை கழக இயக்குநர் உமாநாத்தை கமிட்டி உறுப்பினராக நியமித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

    Also read... கோவையில் கொரோனா தொற்றால் காவலர் உயிரிழப்பு... அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்



    உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி இல்லாமல் வேறு ஒருவரை கமிட்டிக்கு உறுப்பினராக நியமித்திருப்பது எந்த அடிப்படையில் என்பதை முதலமைச்சர் பழனிசாமி தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: OBC Reservation

    அடுத்த செய்தி