• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆட்சியில் இல்லாதபோதே மக்களுக்கு நன்மை செய்யும் திமுக, ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு செய்யும் - மு.க.ஸ்டாலின்

ஆட்சியில் இல்லாதபோதே மக்களுக்கு நன்மை செய்யும் திமுக, ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு செய்யும் - மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு..கஸ்டாலின்

திமுக தலைவர் மு..கஸ்டாலின்

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆட்சியில் இல்லாதபோதே மக்களுக்கு நன்மை செய்யும் திமுக, ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு செய்யும் என மக்கள் நினைத்து பார்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதில் குறிப்பாக கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 67 மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் சான்றிதழ்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியபோது, நம்மை பார்த்து தான் மற்றவர்கள் செய்கிறார்கள். நம் தொகுதியில் செய்யும் நலத்திட்டங்களை பார்த்து தான் பிறர் பின்பற்றுகின்றனர். கொரோனா காலம் ஒரு கொடிய காலம். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை நாம் செய்து வருகிறோம். ஒரு பிரதான எதிர்கட்சியாக அரசுக்கு பல்வேறு யோசனைகளை வழங்கி வருகிறோம். அதனை அரசு ஏற்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.

முதலமைச்சருக்கே நான் தான் வழிகாட்டியாக இருக்கேன். எதிர்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு நாம் தான் ஆளும் கட்சி. தொழில் அதிபர்கள் வேறு மாநிலத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் தமிழகத்தில் கலைக்‌ஷன், கரப்ஷன், கமிஷன் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

இன்னும் இரண்டு நான்கு மாதத்தில் நாம் தான் ஆட்சி அமைக்க போகிறோம் என்பதை தைரியமாக சொல்கிறேன். என்ன இவ்வளவு கான்ஃபிடண்டாக சொல்கிறேன் என கருத வேண்டாம் மக்களை சந்திக்கும் போது அந்த எண்ணம் தான் எனக்கு தோன்றுகிறது.

Also read... ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி

4 மாதத்தில் வரும் தேர்தலை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆட்சியில் இல்லாத போதே பல நல்ல திட்டங்களை செய்து வருகிறோம் ஆட்சியில் இருந்தால் இன்னும் பல செய்வோம் என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. தொழில் அதிபர்கள் வேறு மாநிலத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்...
இதற்கு காரணம் தமிழகத்தில் கலைக்‌ஷன், கரப்ஷன், கமிஷன் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என குற்றச்சாட்டினார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: