தமிழகத்தின் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பியுள்ளார்- நடிகர் சத்தியராஜ் 

நடிகர் சத்யராஜ்

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பபையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழக அரசியலில் வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டது என்றும், அந்த வெற்றிடத்தை நிரப்பியவர் மு.க.ஸ்டாலின் என்றும் நடிகர் சத்தியராஜ் கூறியுள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை புரசைவாக்கத்தில் தமிழர் எழுச்சி நாள் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய மலேசிய நாடாளுமன்ற சபாநாயர் விக்னேஸ்வரன், கருணாநிதி மறைந்தாலும் மக்கள் மனதில் உன்னதாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

மேலும், மலேசியாவில் புதிதாக திறக்கப்பட்ட பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இருக்கைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து, கடைசித்தமிழன் இருக்கும் வரை கருணாநிதிக்கு மரணமில்லை என்றும், அவரைப் போல் இனியொரு ஆளுமை முதலமைச்சராக முடியாது என்றும் புகழாரம் சூட்டினார்.

விழாவில் பேசிய நடிகர் சத்தியராஜ், சமூகநீதியால் கட்டமைக்கப்பட்டுள்ள திமுகவை வீழ்த்த யாராலும் முடியாது என்று கூறினார். மேலும், தமிழகத்தில் உருவானதாக கூறப்பட்ட வெற்றிடம் தற்போது நிரப்பப்பட்டுள்ளதாகவும், அந்த வெற்றிடத்தை நிரப்பியவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும் கூறினார்.

இந்த விழாவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பபையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Also see... தாறுமாறாக வந்த கார் பைக்கில் சென்றவர்களை தூக்கி எறிந்தது: பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!





உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





 
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published: