வெள்ளை அறிக்கையை வெளியிட முதலமைச்சர் மறுப்பு - ஸ்டாலின் குற்றச்சாட்டு

கடந்த 8 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட இரண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், அந்த முதலீட்டுக்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தினார்.

news18
Updated: September 12, 2019, 4:19 PM IST
வெள்ளை அறிக்கையை வெளியிட முதலமைச்சர் மறுப்பு - ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஸ்டாலின் மற்றும் பழனிசாமி
news18
Updated: September 12, 2019, 4:19 PM IST
வெளிநாட்டு பயணம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட முதலமைச்சர் மறுத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் தில்லை கதிரவன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், முதலீடுகள் ஈர்ப்பதாகக் கூறி விரும்பிய நாடுகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

கடந்த 8 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட இரண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், அந்த முதலீட்டுக்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தினார்.

முந்தைய ஆட்சியில் ஜெயலலிதா நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் 14,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடுகள் வந்ததாக ஆர்.டி.ஐ-யில் தெரியவந்துள்ளது என்றும் வெள்ளை அறிக்கை கேட்டால் வெள்ளரிக்காய் தருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த ஜப்பான் சென்றதாக குறிப்பிட்ட அவர், அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் அதிமுக நடத்தும் நாடகம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக, மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின், தன்னுடைய அண்ணன் மு.க. அழகிரி பெயரை குறிப்பிட்டு பெருமிதம் அடைந்தார். தங்கள் குடும்பத்தில் பிறந்த அனைவருக்கும் தமிழ் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் திமுகவினரின் குடும்பத்தில் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

Loading...

Also see...

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...