தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள் பங்கேற்று பொன்விழா நாயகனாக வலம் வருகிறார் துரைமுருகன் என்று கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியும், கருணாநிதித்கும் துரைமுருகனுக்குமான உறவு எடுத்துரைத்தும் பேசுகையில் துரைமுருகன் கண்கலங்கினார்.
மூன்றுநாள் விடுமுறைக்குப் பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது, சென்னை குண்பகோனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விக்கரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையிலான சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவது தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் சபாராஜேந்திரன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்ஜெட் மீதான ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. துறை வாரியாக மானிய கோரிக்கை தாக்கல் செய்ய இன்று முதல் நாள். நீர்வளத்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மானிய கோரிக்கை முதல் நாள் நீர்வளத்துறை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் திமுக-வின் பொதுச் செயலாளராகவும், அவை முன்னவராக உள்ளார்.
இந்தத் துறையின் சார்பில் முதல் நாளில் மானிய கோரிக்கை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி. நூற்றாண்டு சட்டப்பேரவையில், அரை நூற்றாண்டுக்கு முன்னர் வந்தவர் துரைமுருகன். தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதி, பேராசிரியர், மறைவுக்குப் பிறகு எனக்கு வழிகாட்டியாக இருந்து கொண்டிருப்பவர் துரைமுருகன். மனதில் பட்டதை பேசக்கூடியவர்.
அவரை கலைஞர், பேராசிரியர் இடத்தில் வைத்து பார்க்கிறேன். துரைமுருகன் கருணாநிதி அவர்கள், துரை துரை என்று அழைப்பார். அவர்கள் இருவரும் பேசினால் மணிக்கணக்கில் பேசுவார்கள். சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள் பங்கேற்று பொன்விழா நாயகனாக வலம் வருகிறார். பொன் விழா நாயகனாகத் திகழ்கிறார் துரைமுருகன். புன்னகை எப்போதும் அவரது முகத்தில் இருக்கும். என்று கூறி, பொன்விழா நாயகன் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாராட்டு தீர்மானத்தில் பேசியதை கேட்டு கண்கலங்கினார் துரைமுருகன்.
இந்த தீர்மானத்தின் மீது தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் பேச்சுகையில், துரைமுருகன் நவரச நாயகன், கலைஞரின் கண் இசைவுக்கு ஏற்றவாறு வழிகாட்டுதலை வழங்குவார் என்று கூறினார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் பேச்சுகையில், சட்டப்பேரவை வரலாறை முழுமையாக அறிந்தவர். மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர் துரைமுருகன் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தளி ராமசந்திரன் பேசுகையில், அந்த துறைக்கான சிறந்த நிபுணர் துரைமுருகன். நீர்வளத்துறையில் தமிழகம் வஞ்சிக்கப்படும் போது குரல் கொடுத்தவர் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாலி கூறுகையில், நகைச்சுவையாக பேசுவார். அந்த நகைச்சுவையும், பொருளுடன் இருக்கும். அனுபவம் மிக்க திராவிட இயக்க தலைவர் என்றார்.
Must Read : கோவில்களில் அதிகம் கூட்டம் கூடுவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனை செல்வன் பேசுகையில், நீர்வளங்கள் அவ்வப்போது வற்றலாம். ஆனால் 50 ஆண்டுகளாக வற்றாத ஆளுமை துரைமுருகன். தமிழகத்திற்கு தன்னம்பிக்கை தரும் இயக்கமாக திமுக இருக்கிறது. திமுக-வின் எழுச்சி, வீழ்ச்சி என அனைத்திலும் பங்குகொண்டர் துரைமுருகன் என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவரைத் தொடர்ந்து பேசிய, பாஜகவின் நயினார் நாகேந்திரன், எதிர்கட்சியாக இருந்தபோது உரிமையோடு பழகுபவர் துரைமுருகன். மனிதனுக்கு சுவாசம் நின்று போகலாம், ஆனால் விசுவாசம் மட்டும் நின்று போகக்கூடாது. அந்த விஸ்வாசத்துக்கு சொந்தகாரர் துரைமுருகன். கலைஞருக்கு மட்டுமல்ல, அவரது வழிதோன்றலுக்கும் அது உள்ளது என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.