பாமக நிறுவனர் ராமதாஸிடம் வாழ்த்து பெற்ற மு.க.ஸ்டாலின்...!

ராமதாஸிடம் வாழ்த்து பெற்ற மு.க.ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டபோது பாமக நிறுவனர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

  • Share this:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸிடம்
முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து பெற்றார்.

இது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதற்காக வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதாகவும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தொலைபேசியில் பேசுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கூறினார்கள்.

தமிழக முதலமைச்சரான தமக்கு ஆலோசனைகளை வழங்கும்படியும் மருத்துவர் அய்யா அவர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

கோவையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி!


தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் அவர்களுக்கு தமது உளமார்ந்த வாழ்த்துகளை மருத்துவர் அய்யா அவர்கள் தெரிவித்துக் கொண்டார். முதலமைச்சரிடம் நலம் விசாரித்த மருத்துவர் அய்யா அவர்கள், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்கள்.” என கூறப்பட்டுள்ளது.

 முன்னதாக மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டபோது பாமக நிறுவனர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் நலன் காக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Arun
First published: