Corona vaccine : கட்டுமானத் தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மு.க.ஸ்டாலின்

மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சென்னை நந்தனத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன், வெளிமாநில தொழிலாளர்களுக்கான உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை சார்பில் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 14 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலமைச்சர் முன்னிலையில் முதற்கட்டமாக 6 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளிமாநில தொழிலாளர்களுக்கான உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 444 பேருக்கு, 6 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. முதலமைச்சர் வழங்கிய அந்த உணவுப் பொருள் தொகுப்பில் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.

    இதுகுறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா பெருந்தொற்றிலிருந்து கட்டுமான தொழிலாளர்களை பாதுகாத்திடும் சீரிய நோக்கத்துடன் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 13 லட்சத்து 41 ஆயிரத்து 494 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு இணங்க முதற்கட்டமாக 2 லட்சம் கட்டுமான தொழிலாளர் தடுப்பு செலுத்த செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.

    கொரோனா பெருந்தொற்று பரவ காரணமாக அறிவிக்கப்பட்ட பொது மக்கள் பணி வாய்ப்பை இழந்த குடும்ப அட்டை இல்லாத புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் பசியால் வாழக்கூடாது என்ற உயரிய எண்ணத்தோடு 1 லட்சத்து 29 ஆயிரத்து 446 தொழிலாளர்களுக்கு 6 கோடியே 61 லட்சத்து 44 ஆயிரத்து 243 ரூபாய் மதிப்பீட்டில் 15 கிலோ அரிசி 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் இன்று நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : டாஸ்மாக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும்... கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை - அமைச்சர் சேகர்பாபு

    இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், தொழிலாளர்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தொழிலாளர் நலத்துறை செயலர் கிருஷ்குமார், தொழிலாளர் துறை ஆணையர் வள்ளலார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Published by:Suresh V
    First published: